Never Stop Learning
பாவேந்தர் பாரதிதாசன் | Bharathidasan
(Click the heading to learn to read)
முன்னுரை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார். கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட அன்னார், பாரதியாரிடம் கொண்ட ஆழ்ந்த பற்றின் காரணமாகத் தமது பெயரை பாரதிதாசன் என அமைத்துக் கொண்டார். "புரட்சிக்கவிஞர்" எனும் சிறப்பினையும் பெற்றவர்.
மொழிப்பற்று
தாய்மொழியாம் தமிழின் மீது தணியாத பற்றுடையவர் பாவேந்தர். தமிழைத் தம் உயிர் என்றார்; உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழே என்றார். "தன்னைப் பழித்தவனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு, தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே!" என்றார். "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!" என்றார்.
நாட்டுப்பற்று
தாய்நாடாம் தமிழ்நாட்டின் மீது தணியாத பற்றுடையவர் பாவேந்தர். தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற வேண்டும், என்றார். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றார். மொத்தத்தில் பிறர் போற்ற வேண்டும் என்றார்.
பெண்ணுரிமை
தம்முடைய முன்னோடியாகிய பாரதியாரை போலவே இவரும் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தார். பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீராதென்றார். ஊமை என்றே பெண்ணை உரைக்கும் வரை ஆமை நிலைதான் ஆடவர்க்கென்றார். நல்ல குடும்பம் பல்கலைக்கழகமெனில், அக்கழகத்தின் துணை வேந்தர் பெண்ணாகத்தானே இருக்க முடியும் ? வீடும் நாடும் விளங்கப் பெண்ணுரிமை வேண்டும் என்றார்.
புரட்சிக்குரல்
பாவேந்தர் பாடல்களில் தனியிடம் பெற்றது புரட்சிக் கருத்துகளே ! மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, தொழிலாளர் உயர்வு, பொதுவுடைமைக் கொள்கை ஆகிய சமூக முற்போக்குக் கருத்துகளே எதிரொலித்தன. உழைக்காத எவரும் உலகாளக் கூடாதென்றார்.
படைப்புகள்
குடும்ப விளக்கு, இருண்ட வீடு, புரட்சிக்கவி, பாண்டியன் பரிசு, கண்ணகி புரட்சிக்காப்பியம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், அழகின் சிரிப்பு, இசையமுது ஆகியவை அவர்தம் படைப்புகளுள் சில.
முடிவுரை
பாவேந்தர் படைப்புகள் அனைத்துமே படிப்பினைகள், அவற்றைப் படிப்பதன் மூலம் நாமும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, சமூகத்தொண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகிய பண்புகள் பெறுகிறோம்.
நன்றி!
பொருளடக்கம்
முன்னுரை
மொழிப்பற்று
நாட்டுப்பற்று
பெண்ணுரிமை
புரட்சிக்குரல்
படைப்புகள்
முடிவுரை
பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய 10 வரிகள்:-
1. பாரதிதாசன் அவர்கள் புதுவையில் ஒரு மிகப் பெரிய செல்வந்தர் கனக சபைக்கும், இலக்குமி அம்மாளுக்கும் மகனாக 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி பிறந்தார்.
2. இவரது இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். இவர் தந்தையின் மீது கொண்ட அன்பினால் தந்தையின் பெயரில் உள்ள முதற் பாதியை தன்னுடைய பெயரில் இணைத்து கனக சுப்புரத்தினம் என்று அழைத்துக் கொண்டார்.
3. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனது பதினாறாவது வயதில் புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பயின்றார்.
4. பாரதிதாசன் அவர்கள் தமிழாசிரியராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
5. பாரதிதாசன் அவர்கள் தனது மானசீக குருவான சுப்ரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
6. பாரதிதாசன் அவர்கள் எழுத்தாளர், திரைப்படக் கதை ஆசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் குயில் என்னும் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
7. தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக மத எதிப்பு, சாதி மறுப்பு போன்றவற்றினை தனது பாடல் மூலம் பதிவு செய்தார்.
8. இவரது படைப்புகளில் சில பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, பெண்கள் விடுதலை ஆகும்.
9. பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார் "புரட்சி கவிஞர்" என்ற பட்டமும், அறிஞர் அண்ணா "புரட்சிக்கவி " என்ற பட்டமும் வழங்கினர்.
10. பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
நன்றி!!


P.C - thanks to DevianArt.com
திரு.வி. கல்யாண சுந்தரனார்
1.தமிழ்த் தென்றல் எனப் போற்றப்பட்டவர் திரு.வி.க ஆவார்.
2. சென்னைக் கு அருகில் துள்ளம் என்னும் ஊரில் 26.08.1883 ஆம் நாள் பிறந்தார்.
3. முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், கிறிஸ்துவின் அருள் வேட்டல் முதலிய செய்யுள் நூல்களை இயற்றினார்.
4 திரு.வி.க தனது எழுத்தால் மட்டுமல்லாமல் தன் பேச்சாலும் தமிழ்வளர்த்த பெருமகனார்.
5. உரைநடை எழுவதிலும் ஆர்வம் காட்டினார்.
6. முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும் முதவிய பல உரைநடை நூல்களை எழுதினார்.
7. நான் தனியாக வாழவில்லை தமிழுடன் வாழ்கிறேன். என்றவர் திரு.வி.க.
8. தேசபக்தன், நவசக்தி, திராவிடன் போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
9. பெண்ணின் பெருமை என்னும் நூல் எழுதிப் பெண் உயர்வுக்காக உழைத்தவர் திரு.வி.க.
10 1963 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 17 ஆம் நாள் இவ்வுலக வாழ்வினை நீத்தார்.

