Never Stop Learning
Tamil katturai | தமிழ் கட்டுரை | Essay in Tamil | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | katturai eluthuvathu epadi | katturai eluthum murai
கட்டுரை எழுதுவது எப்படி?
கட்டுரை எழுதுவது ஒரு தனிக்கலை. கட்டுரை எழுதுவதில் தேர்ந்து விளங்க வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும். இத்திறமையால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். நல்ல கட்டுரை மற்றும் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு பெரும் புகழ் அடையலாம்.
கட்டுரை எழுத நாம் எழுத போகும் கருத்துப் பற்றி பல செய்திகள் தெரிந்து இருக்க வேண்டும்.பல புத்தகங்கள் மற்றும் இணையதளம் மூலம் செய்திகள் அறிந்து நல்ல பல கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள்.
கட்டுரை எழுதும் முறை
மொழிப்பாடம் கற்பதன் மூலம் படித்தல், கேட்டல், எழுதுதல், பேசுதல் முதலிய திறன்களைப் பெற முடியும். எழுத்துத்திறனை வளர்த்துக் கொள்ள கட்டுரைப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும்.
கட்டுரை எழுதும் முறை :
முன்னுரை, பொருளுரை, முடிவுரை என கட்டுரை மூன்று பகுதிகளை உடையது பொருளுரையில் விளக்கங்கள் மிகுதியாகக் கூறப்படுவதால் பல பத்திகள் பக்கத் தலைப்புகளுடன் அமைத்தல் வேண்டும்.
முன்னுரை :
எடுத்துக்கொண்ட தலைப்பினை விளக்கும் வகையில், கட்டுரை முழுவதையும் படிக்கத் தூண்டும் முறையில் முன்னுரை அமைய வேண்டும்.
பொருளுரை :
கட்டுரை தலைப்பிற்கேற்ப கருத்துகளைப் பிரித்துக்கொண்டு அவற்றிற்கு பக்கத் தலைப்பிட்டு விளக்க வேண்டும். ஒவ்வொரு பத்தியிலும் ஒரு மையக்கருத்து இருத்தல் வேண்டும்.
முடிவுரை :
இதுவரை கட்டுரையில் கூறப்பட்டுள்ள செய்திகளின் தொகுப்பாக இஃது அமைதல் வேண்டும்.
சிறந்த கட்டுரை எழுத குறிப்புகள்
1. கட்டுரைக்கான கருத்துக்களைப் பல நூல்களைப் படிப்பதன் மூலமும், கல்வி அறிவாளர்களிடம் கேட்டறிவதன் மூலமும் மற்றும் இணையதளத்தில் பல வாசிப்பதன் மூலம் பெறலாம்.
2. முன்னுரையை நன்றாக அமைத்துக் கொண்டு பொருளுரையில் கூறப்போகும் கருத்துக்களுள் எதை முதலில் தொடங்குவது என்பதை இறுதியில் முடிப்பது என வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. பொருளுரைப் பகுதியில் கருத்துக்களை சிறு சிறு பத்திகளாகப் பிரித்து, அவற்றிற்கு துணைத் தலைப்பிடுதல் வேண்டும்.
4. பத்தியைத் தொடங்கும் போது சிறிது இடம் விட்டும் தொடங்குதல் கட்டுரைக்கு அழகு சேர்க்கும்.
5. வரியின் தொடக்கத்தில் ஒற்றெழுத்து இடம் பெறல் கூடாது.
6. கட்டுரையின் பொருளுக்கேற்ப மேற்கோள்கள். பழமொழிகள், உவமைத்தொடர்கள், சான்றோர்களின் பொன் மொழிகள் முதலியன இடம் பெறுவது நல்லது.
7. கட்டுரையில் வழுஉச்சொல், கொச்சைச் சொற்களைப் பயன் படுத்தக்கூடாது.
8. எழுத்துப்பிழை, சந்திப்பிழை, இலக்கணப்பிழையின்றி கட்டுரையை எழுத வேண்டும்.
9. சொற்களுக்கிடையே இடைவெளி விட வேண்டும்.
10. கையெழுத்து அழகாக இடம் பெறல் வேண்டும்.
11. அதிகமான அடித்தல் திருத்தல் கட்டுரையில் அமையாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
12 கட்டுரை எழுதி முடித்தபின் ஒருமுறை படித்துப் பார்த்து பிழைகள் இருப்பின் உடன் நீக்க வேண்டும்.
மேற்கூறிய விதிகளை நினைவில் கொண்டு கட்டுரை எழுதினால், கட்டுரை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.



