Never Stop Learning
மகாத்மா காந்தி
(Click the heading to learn to read)
முன்னுரை
'தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற வார்த்தைகளுக்கு ஏற்றாற்போன்று ஒரு மனிதனாகப் பிறந்து தன்னை "மாமனிதனாக" மாற்றிக் கொண்ட மகாத்மா காந்தியடிகளைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.
காந்தியின் இளமை
காந்தியடிகள் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் கரம் சந்த் காந்தி, தாய் புத்திலிபாய் அம்மையார். தாயிடம் இறை உணர்வையும் அன்பினையும் செலுத்தக் கற்றுக் கொண்டார். பின்னர் இங்கிலாந்தில் தன்னுடைய பாரிஸ்டர் பட்டத்தினைப் பெற்றார். இவரது 12 ஆம் வயதில் கஸ்தூரி பாய் என்பவரைக் கரம்பிடித்தார். ஆனால் அதன்பின்பு 19 ஆம் வயதில் தான் பாரிஸ்டர் படிக்கச் சென்றார்.
காந்தியின் மனவலிமையும் சுய உணர்வும்
உயிரினமாகப் பிறந்த எதற்கும் ஒரு விதமான மனவலிமையும் சுய உணர்வும் உண்டு. வேண்டுமானால் காலம் அதனைத் தள்ளி வைத்திருக்கலாம். அவ்வகையில் காந்தியடிகளின் வாழ்வில் பல சம்பவங்கள் நடைப்பெற்றது.
அவர் தென்னாப்ரிக்காவில் 1893 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறிக் கொள்கைகள் இருந்ததனைக் கண்டு மனம் கொதித்தார். காந்தி ஒருமுறை இரவில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டினை பெற்றார். ஆனாலும் இரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட முடியாது என்று மறுக்கப்பட்டது. இதனைப் பற்றி மிகவும் சிந்தித்தபடியே இருந்தபோது மற்றொரு பயணத்தில் வண்டியிலேயே இவரை உட்கார அனுமதிக்கவில்லை. ஆனாலும் போராடி இறுதில் ஓட்டுனருடன் அமர்ந்து பயணம் செய்தார்.
காந்தியடிகள் நடத்திய போராட்டங்கள்
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது நேரில் கண்ட பல கொடுமைகளின் காரணமாக அங்கே ஆங்கிலேயர்களுக்கு எதிராக "சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். 1914 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியா திரும்பிய காந்தியடிகள் இந்திய சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.
பாலகங்காதர திலகரின் மறைவிற்குப் பின்னர் இந்திய சுதந்திர வீரர்களை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் திலகரைப் போன்று தீவிரவாத முறைகளைப் பின்பற்றாமல் மிதவாதம் எனப்படும் அகிம்சை முறையினைப் பின்பற்றினார். தன்னுடைய இந்த போராட்டத்திற்கு அன்றைக்கு கோபால கிருஷ்ண கோகலேவைத் தன்னுடைய குருவாகவும் ஏற்றுக் கொண்டார்.
ரௌலட் சட்டம் அடக்கு முறையிலும் ஆங்கிலேயரின் சட்டங்களை வாய்மை வழியிலேயே எதிர்த்தார். சுதேசி இயக்கத்தினை ஆதரிக்க வேண்டி கதர் ஆடைகளை உடுத்தினார். 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் உப்பின் மீதான வரியினை எதிர்த்து 2500 தொண்டர்களுடன் உப்பு சத்தியாகிரகம் செய்தார். 1942-இல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினையும் நடத்தினார்.
ஆங்கிலேயரை மட்டுமின்றி அதே நேரத்தில் இந்தியர்களை ஆக்ரமித்திருந்த மதவேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்ற கொடுமைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.
காந்தியடிகள் கண்ட வெற்றி
'கத்தியின்றி ரத்தமின்றி' போராடியதால் ஆங்கில அரசு இவரது உறுதி கண்டு ஒரு வழியாக இந்தியாவிற்கு விடுதலை தர சம்மதித்ததன் காரணமாக 1947 ஆகஸ்ட்-15 நம்முடைய சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்டது.
முடிவுரை
மிகவும் விரிந்த சிந்தனையுடன் இந்திய நாட்டையும் மக்களையும் மிகவும் மிகவும் நேசித்து, நமக்காக வாழ்ந்த நம் மகானை, நம் ஒருவனான 'கோட்சே' என்பவனே 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் சுட்டுக் கொன்றான். தன்னை சுட்டவனைக் கூட மனித்தமகான் அவர். மனிதன் தன் செயல்களின் மூலமாக மாகாத்மாவாக மாற முடியும் என்று சாதித்துக் காட்டி மற்றவர்களுக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தினையும் இழந்த அந்த மகானைப் பற்றி பேசி முடியாது. ஆனால் அவர் வழியில் வாழ முடியும். இதுவே நாம் அவருக்குச் செய்யும் கடமையாகும்.
நன்றி
மகாத்மா காந்தி பற்றி 10 வரிகள் :-
1. மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தர் நகரில் பிறந்தார்.
2. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் காந்தி மற்றும் அவரது தாயின் பெயர் புட்லி பாய்.
3. காந்தி ஜி தனது 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் பெயர் கஸ்தூரி பாய்.
4. காந்தி ஜி லண்டன் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
5. அவர் தனது முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
6. பாலகங்காதர திலகரின் மறைவிற்குப் பின்னர் இந்திய சுதந்திர வீரர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
7. சத்தியமும் அகிம்சையும் அவரது வாழ்க்கையின் கொள்கைகள்.
8. காந்திஜி ஒத்துழையாமை இயக்கம், தண்டி மார்ச், உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு ஆகிய இயக்கங்களை வழிநடத்தினார்.
9. அவரது தலைமையின் கீழ் இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்றது.
10. காந்திஜியை 1948 ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கோட்சே என்பவர் சுட்டுக் கொன்றார்.
நன்றி.
மகாத்மா காந்தியடிகள் பற்றிய 10 வரிகள்:-
1. காந்தியின் முழுப்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி.
2. காந்திஜி "இந்திய தேசத்தின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.
3. காந்தி ஜிக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
4. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி "காந்தி ஜெயந்தி" தினம் கொண்டாடப்படுகிறது.
5. காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம் அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் பொது சபை அறிவித்துள்ளது.
6. மக்கள் அவரை அன்புடன் பாபு என்று அழைப்பார்கள்.
7. அவர் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக "சத்தியாகிரக" இயக்கத்தை தொடங்கினார்.
8. ஆங்கிலேயரை மட்டுமின்றி அதேநேரத்தில் இந்தியர்களை ஆக்ரமித்திருந்த மதவேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்ற கொடுமைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.
9. "செய் அல்லது செத்துமடி" (Do or Die) இதுவே காந்திஜியின் முழக்கம்.
10. மகாத்மா காந்தியின் மறைந்த நாளான ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நன்றி!
முன்னுரை:
"அறந்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல்"
என்பது வான்மறை வள்ளுவம். அறமே இன்பம் எனக் கொண்ட காந்தியடிகளின் போராட்டங்கள் அனைத்தும் அறபோராட்டங்களாகவே அமைந்தன. அவை என்றும் உலகத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அது பற்றி இங்குக் காண்போம்.
போராட்ட காலம்:
இந்தியாவில் காந்தியடிகள் தலைமையில் அறப் போராட்டம் நடந்த காலம் 1919 முதல் 1947 வரையிலான கால கட்டம் ஆகும். அறத்தின்பால் பற்றுடைய அவர் நடத்திய அறப் போராட்டங்கள் உப்புப் போர், ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், அந்நியப் பொருள் புறக்கணிப்பு, உண்ணா நோன்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பனவாகும்.
சத்தியாக்கிரகம்:
ஆங்கிலேயர் படை பலத்தையும், நாட்டு மக்களின் அறியாமையையும் கண்ட காந்தியடிகள் சத்தியாக்கிரகத்தையே தம் ஆயுதமாகக் கொண்டார். சத்தியாக்கிரகம் என்றால் அறவழி - உண்மை வழி நடத்தல் என்பது பொருளாகும். முதன் முதலில் ஆங்கிலேயரின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் 1919 ஏப்ரல் ஆறாம் நாளைச் சத்தியாக்கிரக நாளாக அறிவித்தார். அப்போது பெரியார் ஈ.வேரா. தமிழகத்தில் அவருக்கு உற்ற துணைவராகத் திகழ்ந்தார்.
வெள்ளையேனே வெளியேறு:
எதற்கும் அசைந்து கொடுக்காத ஆங்கிலேயரை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942 இல் தொடங்கினார். போராட்டம் வலுத்தது. ஆங்கில அரசு அதிர்ந்து அதுவே சிறந்த போராட்டமாகவும் காந்தியடிகளின் இறுதிப் போராட்டமாகவும் அமைந்து வெற்றியைத் தந்தது.
முடிவுரை:
காந்தியடிகளின் கத்தியின்றி ரத்தமின்றி நடந்த அறப் போரைக் கண்டு உலகமே வியந்தது. அமெரிக்க மார்ட்டின் லூதரும் ஆப்பிரிக்க நெல்சன் மாண்டலேயும் அவர் வழி போற்றி வென்றனர். ஆகவே அறப்போரை ஆயுதமாகக் கொண்டால் அழிவிலிருந்து மீளலாம்.
நன்றி!